ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:17 IST)

நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆய்வு!

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
 
மாவட்ட ஆட்சியர் சிபி, ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
 
அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
 
இதைத்தொடர்ந்து சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மின்நகர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
இதையடுத்து அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.......
 
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 252 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. எவ்வளவு பணிகள் நடைபெற்று இருக்கிறது என்பதை நானும், மாவட்ட ஆட்சியரும் இன்று ஆய்வு செய்தோம். சிதம்பரத்தில் 42 சதவீத கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிதம்பரம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் 350 கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்ட பணிகளில் எவ்வளவு பணிகள் நடைபெற்று இருக்கிறது என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் இன்று 17 புதிய பேருந்துகள துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள விவசாய முறைகள் அறுவடைக்கு பிந்தைய முறைகள், குறைந்த செலவில் லாபகரமாக விவசாயம் செய்வது எப்படி என்பன போன்ற கருத்துக்களை அங்குள்ள பல்கலைக்கழகத்துடன் ஆலோசித்தோம். 
 
கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க புளியங்குடி கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் மார்ச் மாதத்திற்குள் சாலை பணி, குழாய்கள் புதைக்கும் பணி, குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் முடிவு பெறும். புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றார்.