1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (10:22 IST)

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தினசரி பாதிப்பு 200 தாண்டி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை என்றும் தமிழ்நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் இல்லை என்று மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran