ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:48 IST)

அட்டை பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தையின் உடல்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்..!

சென்னை  அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து தந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: 
 
கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையை பரிசோதித்த போது இறந்தது தெரிய வந்தது. 
 
அதன் பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என குழந்தையின் தந்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் அவரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 
 
குழந்தையின் உடல் அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறு என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை மீது எந்த தவறும் இல்லை. 
 
மேலும் இது தொடர்பாக மூன்று பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva