வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (12:07 IST)

எந்த கேள்வி கேட்டாலும் ஜெய்ஸ்ரீ ராம் என பதில் கூறிய அமைச்சர் எல்.முருகன்.. பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி..!

மத்திய அமைச்சர்கள் முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த நிலையில் திடீரென எந்த கேள்வி கேட்டாலும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது குறித்து கேள்வி கேட்டபோது இதற்கு என்னுடைய ஒரே பதில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவது தான் என்று கூறிய ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று தொடர்ச்சியாக கூறிக் கொண்டே இருந்தார்.

அந்த கேள்வியை அடுத்து வேறு கேள்விகள் கேட்டாலும் அவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று தான் பதில் அளித்தார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்தியாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என அமைச்சர் எல் முருகன் பதில் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran