செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:49 IST)

கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பமா? - எடப்பாடியாரை சந்திக்கும் எல்.முருகன்!

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்று முதல்வரை சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் எழுந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள் ஓய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் குழப்பமின்று தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது முதல்வர் இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவிக்க அவர் செல்வதாக கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தல் கூட்டணி குறித்த ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நிகழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.