வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (15:46 IST)

அமலாக்கத்துறைக்காக கதவை திறந்தே வச்சுருக்கேன்.. அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டிற்கு வந்து சோதனை செய்வார்கள் என்றும்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் வீட்டு கதவை தட்டுவார்கள் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கதவை தட்ட வேண்டிய வேலையை நாங்கள் வைக்க மாட்டோம், கதவை திறந்து வைத்திருப்போம் என்று அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். 
 
அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது விஜய் அரசியல் கட்சி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் எந்த கட்சிய்யிலும் இணையலாம் என்று கூறினார் 
 
இதனை அடுத்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டு கதவை அமலாக்கத்துறை அதிகாரிகள் தட்டுவார்கள் என்று கூறிய போது அவர்களுக்கு தட்ட வேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் கதவை திறந்து வைத்திருப்போம், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சோதனைக்கு வரலாம் என்று தெரிவித்தார் 
 
மேலும் கூட்டணி மற்றும் தொகுதி உஅன்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எந்த வதந்தியும் எழுப்ப வேண்டாம், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva