செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (14:18 IST)

உதயநிதியை எம்.எல்.ஏ என மாணவர்களிடம் அறிமுகம் செய்த அமைச்சர்!

உதயநிதி ஸ்டாலினை சினிமா ஹீரோ என மாணவர்கள் கூற அதற்கு அமைச்சர் அவர் சினிமா ஹீரோ அல்ல, எம்எல்ஏ என மாணவர்களுக்கு அறிமுகம் செய்த காட்சி இன்று நடைபெற்றது
 
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை எடுத்து பள்ளி மாணவர்களை மக்கள் பிரதிநிதிகள் வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரசு பள்ளி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர் 
 
அப்போது உதயநிதியை பார்த்து இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று அமைச்சர் கேட்க, அனைவரும் சினிமா ஹீரோ என்று பதில் அளித்தனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ், ‘அவர் சினிமா ஹீரோ அல்ல மக்கள் பிரதிநிதி எம்எல்ஏ என்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அந்த வகுப்பறையில் சிரிப்பலைகள் கேட்டது என்று குறிப்பிடத்தக்கது