புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:56 IST)

பாடம் நடத்தும் ஆசிரியர்களே பாஸ் ஆகவில்லையாம்! அதிர்ச்சியளிக்கும் டெட் முடிவுகள்

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை எழுதிய 5 லட்சம் ஆசிரியர்களில் ஒருசிலரே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன்படி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வருடம் ஆசிரியர் தகுதி பெறுவதற்காக 5 லட்சத்து 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவாக நடைபெறும் தேர்வில் இரண்டு தாள்களிலும் தேர்ச்சியடைந்தோர் 1236 பேர் மட்டுமே. லட்சக்கணக்கில் தேர்வு எழுதில் ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதில் பலர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் என்பதால் இந்த தேர்வில் வெற்றிபெறாவிட்டால் பணியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் “பாடம் நடத்தும் ஆசிரியர்களே தேர்வில் பாஸ் ஆகாவிட்டால் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்துவார்கள்?” என்று பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.