ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:15 IST)

பரந்தூர் விமான நிலையம் தொடங்கியவுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மத்திய அமைச்சர்

metro
சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் செயல்படத் தொடங்கியவுடன் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
சென்னை மீனம்பாக்கத்தில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கும் நிலையில் பரந்தூரில் உலகில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு விரிவாக ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பரந்தூர் விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் எனவே நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னையின் பரந்தூர் விமான நிலையம் இயக்கப்பட்ட உடன் பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக வடபழனி மெட்ரோ நிலையத்தில் ஆய்வு செய்த அவர் அங்கிருந்து அவர் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran