1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (16:05 IST)

வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சிய வியாபாரி.. 2 பேர் மருத்துவமனையில்..!

alcohol
மதுராந்தகம் அருகே அடுப்புக்கரி வியாபாரி ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சிய நிலையில் அந்த சாராயத்தை குடித்த இரண்டு பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மதுராந்தகம் அருகே 65 வயது தேவன் என்பவர் அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அடைந்த மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல், சாராயம் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் வியாபாரி தேவனை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை செய்தபோது தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சாராயம் குடித்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் கள்ளக்குறிச்சியில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வியாபாரி ஒருவர் தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran