புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:44 IST)

3 வயது நாய்க்கு டி என் ஏ சோதனை – மகாராஷ்டிராவில் நடந்த வினோத சம்பவம்!

மகாராஷ்டிராவில் ஒரே நாய்க்கு இரண்டு நபர்கள் உரிமைக் கொண்டாடிய போது நாய்க்கு டி என் ஏ சோதனை வரை சென்றுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹொசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சதாப் கான். இவர் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் வளர்ப்பு நாயான கோகோ சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போக, அதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு சிவ்ஹரி என்பவரது வீட்டில் தனது நாய் போலவே ஒரு நாய் இருப்பதாக கேள்விப்பட்டு தன் நாயைக் கேட்டுள்ளார். ஆனால் சிவ்ஹரியோ அது தன்னுடைய நாய் டைகர் எனக் கூறி தகராறு செய்துள்ளார். இந்த விஷயம் போலிஸாருக்கு செல்ல அங்கு சென்ற சதாப் தன் நாய்க்கு டி என் ஏ பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து நாய்க்கு டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர் போலீஸார்.