வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2017 (20:09 IST)

கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தயில் உடன்பாடு இல்லாததால் திட்டமிட்டப்படி உண்ணாவிரதம்

தமிழகத்தில் கடந்த 2014 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி கரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவக்கல்லூரி அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதி மக்களே முன் வந்து கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை சார்ந்த மக்கள் பயன்பெற இந்த வாங்கல் குப்புச்சிப்பாளையம் மக்களே சுமார் 25.60 ஏக்கர் நிலத்தை இனாமாக தமிழக அரசிற்கு வழங்கப்பட்டது. அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கரூர் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம், பின்பு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முறையிட்டு வழக்கு தொடர்ந்து நடத்தினோம்,


 

கரூர் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும், அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த திட்டம் என்பதினால் கரூர் மக்களவை துணை சபாநாயகரின் அரசியல் சூழ்ச்சிகளால் தற்போது இந்த இடத்தில் அமைய இருந்த மருத்துவக்கல்லூரியை நிறுத்தி அதை வேறு இடத்திற்கு மாற்ற சதி நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆரம்பிக்க கோரி, வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதிக்கு வர வேண்டுமென்று வரும் 20 ம் தேதி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாகவும் அந்த ஊர் பொதுமக்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியும், தி.மு.க கட்சியும், பா.ம.க, நாம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று உண்ணாவிரதப் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு ரூ 229.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 01-03-16 ம் வருடம் காணொளி காட்சி மூலமாக ஜெயலலிதாவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.  தற்போது இந்த மருத்துவக்கல்லூரி எங்கும் அமையாவிட்டால் அந்த நிதி தள்ளுபடியாகி கலாவதியாகும் நிலை உருவெடுத்துள்ளதால் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்த அந்த ஊர் பொதுமக்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நாளில் மருத்துவக்கல்லூரி அமையப்பெற்றிருந்தால் வருடத்திற்கு 150 மாணவ, மாணவிகள் என்று இரண்டு வருடங்களில் 300 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெற்றிருக்க வேண்டும், அந்த சேர்க்கை எங்கே என்று கூறிய அவர்கள், இதே மருத்துவக்கல்லூரி அறிவித்த நாளிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவித்த மருத்துவக்கல்லூரி வேலைப்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சேர்க்கையும் நடந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் உண்ணாவிரதப்போராட்ட அறிவிப்பையடுத்து அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனையுடன் கூடிய அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்த அமைதி பேச்சுவார்த்தையில் முன்னாள் கரூர் எம்.எல்.ஏ க்கள் டி.என்.சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்), கு.வடிவேல் (அ.தி.மு.க), கிருஷ்ணராயபுரம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுச்செயலாளர் கார்வேந்தன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞரணி நிர்வாகி பாஸ்கர் எ பகலவன், ராஜா, பா.ம.க மாவட்ட செயலாளர் வே.கண்ணன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க நிர்வாகிகள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் உண்ணாவிரதப்போராட்டம் கைவிட வேண்டியும், உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். இருப்பினும் தங்களது கோரிக்கைகளை மேலிடத்தில் அனுப்புவதாக கூறியதையடுத்து உண்ணாவிரதப்போராட்டம் திட்டமிட்டப்படி நடப்பதாகவும், இந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று அனைத்து தரப்பு மக்களும் வெளியாறினார்கள்.

மேலும் ஏற்கனவே தற்போது அரசு அமைக்க உள்ள சணப்பிரட்டி பகுதியில் ஏற்கனவே 1976 ம் ஆண்டே அங்குள்ள சாயக்கழிவு நீரை அகற்றுவதற்காக அங்கே பிளாண்ட் போடபட்ட நிலையில் இந்த பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டால் மேற்கொண்டு நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் என்பதோடு, மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்றும் கூறி, வெளிநடப்பு செய்தவர்கள் திட்டமிட்டப்படியே உண்ணாவிரதம் வரும் 20 ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க வின் ஆளுங்கட்சியை எதிர்த்து இல்லாமல் ஒரே கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவர்களை கண்டித்து அ.தி.மு.க உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொள்ளும் இந்த உண்ணாவிரதப்போராட்டம் தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
-கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்