வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (12:01 IST)

காத்திருந்த கஸ்டமர்கள்; கண்டுக்காத ஊழியர்கள்! – ரணகளமான ஹோட்டல்!

மயிலாடுதுறையில் ஹோட்டல் ஒன்றில் உணவளிக்க தாமதப்படுத்தியதால் மர்ம கும்பல் பணியாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர் காட்டில் உள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு மது அருந்திய இரண்டு ஆசாமிகள் உணவருந்த வந்துள்ளனர். உணவகம் முழுக்க பலர் சாப்பிட வந்து அமர்ந்திருந்ததால் மேசையை துடைக்கவும், உணவு பரிமாறவும் ஊழியர்கள் தாமதப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் மது அருந்திய ஆசாமிகள் உணவக ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் கைகலப்பான நிலையில் மது ஆசாமிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு வந்த அந்த மது போதை ஆசாமிகள் அரிவாள் சகிதம் உணவகத்திற்குள் புகுந்து ஊழியர்கள் மற்றும் உணவக உரிமையாளரின் மகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர். இதில் உணவக உரிமையாளரின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் உணவகத்தை தாக்கிய ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.