மே மாதத்தில் உச்சம் தொடும் கொரோனா? – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்!

Prakash
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே மாதத்தில் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் “மே மாதத்தில் கொரோனா உச்சத்தை தொடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவறை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சென்னையில் லேசான தொற்று உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தொற்று இல்லாதவர்கள் மருத்துவமனை வர தேவையில்லை” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :