வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (07:45 IST)

கொரோனா பரவல் எதிரொலி.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்..

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் 3000க்கும் அதிகமானோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பரவி வரும் தகவல் தவறானது என்றும் அதுபோன்ற எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva