தற்கொலைக்கு முயன்ற தங்கமகன் மாரியப்பனின் குடும்பம்: அதிர்ச்சி தகவல்!
ரியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த மாரியப்பன் தங்கவேலுவை இந்தியாவே கொண்டாடி வருகிறது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் குடும்பம் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் குறித்தான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
வறுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றதாக அவரது தாயார் கூறியுள்ளார். மாரியப்பன் 5 வயதாக இருக்கும் போது அவரது கால் விபத்து ஒன்றில் சிக்கி சேதமடைந்தது. பள்ளியில் படிக்கும் போது மாரியப்பனின் கால் ஊணமாக இருப்பதால் யாரும் விளையாட சேர்க்கவில்லை.
ஆனால் அவரது விளையாட்டு ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் அவரை உயரம் தாண்டுதலில் சேர்த்து விட்டனர். மாரியப்பன் சிறுவனாக இருக்கும் போதெ அவரது தந்தை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வறுமையில் இருந்த நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முயன்றோம்.
ஆனால், மாரியப்பன் எங்களை தடுத்து நிறுத்தி ஒரு நாள் இந்த வறுமை நிலை மாறும் என கூறி, பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று அந்த பணத்தை கொண்டு குடும்பத்தையும், தனது செலவையும் பார்த்துக்கொண்டான். என அவரது தாயார் கூறியுள்ளார்.