1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:34 IST)

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

appavu
தமிழக சட்டசபையில் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு சற்று முன் பேட்டி அளித்துள்ளார். 
 
மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதும் நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 2023 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20 ஆம் தேதி நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு அறிவித்துள்ளார். வரும் மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் 2023 24 ஆம் ஆண்டுக்கான முன் மானிய கோரிக்கையையும் 2022-23 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையையும் நிதி அமைச்சர் சட்டசபையில் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் மகளிர்களுக்கு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.
 
Edited by Mahendran