1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:42 IST)

கடந்த ஆண்டு பட்ஜெட்டை சட்டசபையில் தவறுதலாக வாசித்த காங்கிரஸ் முதல்வர்..!

rajastan cm
கடந்த ஆண்டு பட்ஜெட்டை சட்டசபையில் தவறுதலாக வாசித்த காங்கிரஸ் முதல்வர்..!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கடந்த ஆண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்ததால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
 
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்  நிதி அமைச்சராகவும் இருப்பதால் அவர் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் வாசித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மீண்டும் இந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்தார். அப்போது ஒரு பட்ஜெட்டை கூட சரியாக வாசிக்கத் தெரியாத முதல்வர் கைகளில் தான் ராஜஸ்தான் மாநிலம் இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் வசந்தரா ராஜே பேசினார்
 
இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றது என்பதும் இதனால் சட்டசபை சில நிமிடங்கள் அமளி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva