வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (08:08 IST)

ரி ரிலீஸில் இரண்டரை ஆண்டுகள் ஓடி சாதனை படைக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா!

சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விண்ணை தாண்டி வருவாயா. இந்த படம் இளைஞர்களையும் காதலர்களையும் பெரியளவில் கவர்ந்தது.

இதனால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் சிம்புவும் கௌதம் மேனனும் திட்டமிட்டார்கள். ஆனால் அது கைகூடவில்லை. இந்நிலையில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் மாலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரி ரிலீஸ் செய்யப்படட்து.

அன்று முதல் இன்று வரை இந்த படம் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. தினமும் ஒரு காட்சி மட்டும் அந்த மாலில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.