வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:42 IST)

மன்சூர் அலிக்கானின் “தமிழ் தேசிய புலிகள் கட்சி” – நாம் தமிழர் வாக்குவங்கிக்கு பாதிப்பா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை மன்சூர் அலிகான் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அதிலிருந்து விலகி “தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இவ்வாறு புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியை பாதிக்குமா என்ற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.