வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 23 டிசம்பர் 2023 (07:37 IST)

நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சரா? தமிழ்நாட்டின் எதிரியா? அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி குறித்து விளக்கம் அளித்த அவர் 4000 கோடி செலவு செய்தது எங்கே என்றும் கேள்வி எழுப்பினார். 
 
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருக்கு ஒரு இருப்பதாவது:
 
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா...
 
மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம். மண்டியிட்டு கேட்கிறோம் என்று நினைக்கிறாரா..?
 
கட்டிய  வரி பணத்திற்கு வட்டி அளவிற்கு கூட திரும்ப தராமல் பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது
 
இந்த ஆணவப் பேச்சு புதிதல்ல தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.
 
 
Edited by Siva