வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (10:27 IST)

ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் மணிரத்னம் உள்பட 6 பிரபலங்கள் தேர்வு..!

maniratnam
ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு மணிரத்னம் உள்பட 6 இந்திய பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் தேர்வு குழுவிற்கு மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சில இந்தியர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார், தயாரிப்பாளர் கரன்ஜோகர் உறுப்பினர்களாக உள்ளனர் 
 
தமிழகத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ஏற்கனவே ஆஸ்கர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது மேலும் 6 இந்திய பிரபலங்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran