புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:33 IST)

காதலியுடன் மெய்மறந்து செல்போன் பேச்சு… கிணற்றில் விழுந்த இளைஞர்!

ஆஷிக் என்ற இளைஞர் நாமக்கல்லில் தரைக்கிணற்றில் விழுந்த நிலையில் மறுநாள் காலைதான் மீட்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் நாமக்கல்லில் உள்ள நூல் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது காதலியுடன் இரவில் தனிமையில் பேசுவதற்காக வசிக்கும் பகுதிக்கு அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது இருட்டில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றினுள் விழுந்துள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவரை மீட்க முடியவில்லை. மறுநாள் காலைதான் அவரை கயிறு கட்டு மீட்டுள்ளனர். அவருக்கு கையில் பலத்த காயமும் சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.