1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (07:34 IST)

காதலியின் தங்கைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய காதலன் – அடுத்து நடந்தது என்ன தெரியுமா ?

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ரூபன் என்ற நபர் காதலியுடன் சண்டை போட்டு அவர் பிரிந்து சென்றதால் அவரது தங்கைக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ரூபன் என்ற இளைஞர் சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே சண்டை வரவே ரூபனைப் பிரிந்து சென்றுள்ளார் அவரது காதலி. இதனால் அதிருப்தி அடைந்த ரூபன் காதலியை மீண்டும் தன்னோடு சேர வைக்க பல வழிகளை மேற்கொண்டுள்ளார். எதற்கும் அந்த பெண் ஒத்து வராததால் தாங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கும் அஞ்சாமல் அவரது தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த ரூபன் தனது காதலியின் தங்கை மொபைலுக்கு அவருக்கு ஆபாச மெஸேஜ்கள் அனுப்பியது மட்டும் இல்லாமல் ஆபாசப் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதைப்பார்ர்த்து அதிர்ச்சியான அந்த பெண் தனது பெற்றோரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸில் புகாரளிக்க தற்போது போலிஸார் ரூபனைக் கைது செய்துள்ளனர்.