ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (23:13 IST)

அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த நபரை மடக்கிய போலீசார்

சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் ஒருவர் அமர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த முனியசாமி என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நபர் ஒவ்வொரு வாரமும் கையெழுத்து போடுவதற்காக சிவகங்கை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்திற்கு கையெழுத்திட வந்தபோது நீதிபதி உள்பட யாரும் நீதிமன்றத்தில் இல்லை. உடனே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்தார். அப்போது தற்செயலாக உள்ளே வந்த வழக்கறிஞர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாரிடம் தகவல் தர, உடனடியாக வந்த போலீசார் அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த முனியசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.