செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (08:03 IST)

டாஸ்மாக் சரக்கைப் பிரிப்பதில் சிக்கல் – மனைவியைக் கொலை செய்த கணவன்!

டாஸ்மாக் கடையில் வாங்கி வந்த சரக்கு பாட்டில்களைப் பங்கிட்டுக் கொள்வதில் சிக்கல் எழுந்த நிலையில் மனைவியைக் கணவனேக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 42 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் மே 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் திறக்கப்பட்டது. அதையடுத்து கடைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் அடித்து பிடித்து டோக்கன் வாங்கி சரக்குகளை வாங்கி செல்கின்றனர்.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இதுபோல மாணிக்கம் 6 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். மாணிக்கத்தின் மனைவி பழனாளுக்கும் குடிக்கும் பழக்கம் இருந்ததால் இருவரும் சரக்கைப் பங்கு பிரிக்க ஈடுபட்ட போது மாணிக்கம் தனக்கு 4 பாட்டில்களை எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை உருவாக கட்டையால் மனைவியைத் தாக்கியுள்ளார். மேலும் சுவற்றில் தலையை மோதி அவரைக் கொன்றுள்ளார். இதையறிந்த போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.