புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (17:54 IST)

மனைவியின் தலைமேல் கல்லைத்தூக்கி போட்ட கணவன் – சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவி மேல் சந்தேகப்பட்ட கணவர் அவர் மேல் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் தையல் தொழில் செய்துவரக்கூடியவர் தான் தங்கராஜ். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் தங்கராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மனைவியோடு அதிகமாக சண்டை போட ஆரம்பித்துள்ளார்.

மேலும் குடும்ப செலவுக்கு கூட சரியாக பணம் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் இல்லற வாழக்கை சந்தோஷமாக சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மேலும் ருக்மணியின் மேல் அவருக்கு சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரம் தனது மனைவியின் தலைமேல் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வந்த போலீசார் தங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.