1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:59 IST)

சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு வந்த சிறுநீர் பார்சல்!

இங்கிலாந்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் சிறுநீர் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இப்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதில் அவ்வப்போது சில குளறுபடிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து ஹலோ ப்ரஷ் என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் உணவு ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பார்சலோடு கோக் பாட்டிலில் சிறுநிரும் வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியான அவர் அந்த நிறுவனத்தை டேக் செய்து புகார் அளிக்க, மன்னிப்புக் கேட்ட அந்த நிறுவனம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.