ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு
முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயணித்த கார் வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, மும்பை காவல் நிலையத்திற்கு திடீரென தொலைபேசி மூலம் ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே காரை வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்துவேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில மும்பை காவல் நிலையங்களுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சைபர் கிரைம் அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Siva