வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (17:57 IST)

கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கொடூர கணவன்!

கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கொடூர கணவன்!

திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் மனைவி கறிக்குழம்பு வைத்து தர மறுத்ததால் குடித்து விட்டு வந்த கணவன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மணப்பாறை அருகே உள்ள வாகைக்கும் பகுதியில் பலகாரங்களை தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வருபவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி சில தினங்களுக்கு கறி சாப்பிடமால் விரதம் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் கறிக்குழம்பு வைத்து தருமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் சாந்தி நான் விரதத்தில் உள்ளேன் கறிக்குழம்பு வைக்க கூடாது என கூறிவிட்டு பக்கத்துவீட்டு பெண்ணுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
இதனையடுத்து அவர்களை பின்தொடர்ந்து சென்ற சண்முகம், மனைவி சாந்தியின் கழுத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அறுத்துள்ளார். இதனையடுத்து சண்முகத்திடம் இருந்து சாந்தியை மீட்ட அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர்.
 
இதனையடுத்து காவல்துறையினர் சாந்தியை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.