புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (16:23 IST)

நைட்டு கம்பெனி தரியா... உதார் பேர்வழியை கும்மி எடுத்த பெண்கள்!

வேலை வாங்கி தருவதாக் கூறி பெண்களை பாலியல் ரீதியான இன்னல்களுக்கு உள்ளாக்கிய நபரை அடித்து வெளுத்துள்ளனர். 
 
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவன் கலெக்டர் ஆபீசில் வேலை பார்ப்பதாக சொல்லி எதேனும் உதவி வேண்டுமானாலும், வேலை வேண்டுமானாலும் என்னிடம் சொல்லுங்கள் பக்காவாக முடித்து தருகிறேன் என கூறி உதார் விட்டுள்ளான். 
 
இதை நம்பி பல பெண்கள் ஏமார்ந்துள்ளனர், அதில் சிலருக்கு பாலியல் ரீதியான மிரட்டலையும் கொடுத்துள்ளான. அந்த வகையில் பாலியல் துன்பங்களுக்கு உள்ளான பெண் ஒரு மற்றொரு பெண்ணிடம் இது பற்றி கூறி அவரும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளான். 
அதனால் 2 பெண்களும் சேர்ந்து, அந்த நபருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். அதன்படி, அந்த நபரை வரவழைத்து விரட்டி அடித்துள்ளனர். நடுரோட்டிலேயே தர்ம அடி அடித்துள்ளனர். 
 
உண்மையை தெரிந்துக்கொண்ட அந்த பகுதி இளைஞர்கள், பொதுமக்களும் ஆத்திரத்தில் வந்து அவர்களும் நபரை புரட்டி எடுத்தனர். அதோடு போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.