திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (21:22 IST)

பாட புத்தகத்தில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றியவர்கள் கைது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படம் பாடப்புத்தகத்தில் இருக்க கூடாது என்பதை வலியுறுத்திய மக்கள் அதிகார அமைப்பினர் திருச்சி உள்ள மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற மாணவர்களிடம் இருந்து புத்தகத்தை வாங்கி அதில் இருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு பதிலாக திருவள்ளுவர் படத்தை ஒட்டினர்



இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயலலிதா படத்தை மறைப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் குற்றவாளி ஒருவரின் புகைப்படம் புத்தகத்தில் இருந்தால் மாணவர்களுக்கு தவறான பாடம் கற்பிக்கப்படுவதாக மாறிவிடும் என்று அவர்கள் போலிசார்களுடன் வாதம் செய்தனர்.

இதனையடுத்து மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.