பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வரைபடம் !
கேரள மாநிலம் பட்ஜெட் உரை முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட படம்
கடந்த ஆண்டு மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கேரளாவில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
இந்த நிலையில், இன்று, 2020 -2021 ஆம் ஆண்டு கேரள பட்ஜெட் உரையின் முகப்புரையில், CAA மற்றும் NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வரைபடம் அச்சிட்டுள்ளனர்.