செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (07:55 IST)

ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் – மாபா பாண்டியராஜன் பதில் !

மிசா வழக்கில் ஸ்டாலின் கைதாகவில்லை எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பிய அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆனால் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவேண்டாம் எனக் கூறி அமைதியாக்கினார். அதன் பின்னர் திமுகவினர் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு அதில் ஸ்டாலின் பெயர் இருப்பதைக் காட்டி ஆதாரத்தைக் காட்டினர். இதையடுத்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஸ்டாலினிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் ‘ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத அவர் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.