செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

புராதனச் சின்னங்கள் குறித்து ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை: அமைச்சர் பதிலடி

புராதனச் சின்னங்கள் குறித்து ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்களை தொல்லியல் துறை கைப்பற்றினால் தமிழகமே போர்க்களமாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் மத்திய தொல்லியல் துறை மீது முக ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் புராதனச் சின்னங்கள் குறித்து அவருக்கு போதிய புரிதல் இல்லை என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் பராமரிப்பையும் மத்திய தொல்லியல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னதாக இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது