செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (13:46 IST)

ராஜினாமா செய்ய போகிறேன்.. மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு.. மீண்டும் இடைத்தேர்தலா?

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில்  மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 
 
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் தொகுதி பிரச்சனையை குறித்து பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதனால் எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்படுத்தியது. அவர் உண்மையில் ராஜினாமா செய்வாரா? மதுரை தெற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran