1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (07:37 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கோவை, திருப்பூர் அணிகள் அபார வெற்றி..!

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய இரண்டு போட்டிகளில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
நேற்றைய முதல் போட்டியில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. 
 
ஆனால் திண்டுக்கல் அணியின் 19.1 ஓவரில் அனைத்துக் விக்கெட்டுக்களையும் இழந்து 147 ரன்கள் மட்டும் எடுத்ததால் 59 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து இரண்டாவதாக திருப்பூர் மற்றும் திருச்சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் திருப்பூர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது புள்ளி பட்டியலில் கோவை நெல்லை ஆகிய இரண்டு அணிகள் 8 புள்ளிகள் உடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva