வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (14:58 IST)

மதுரை ராஜாஜி மருத்துவமனை உயிரிழப்பு சம்பவம் – திடீர் திருப்பம் !

மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மின்வெட்டால் ராஜாஜி மருத்துவமனையில் 5 நோயாளிகள் பலியாகினர்.

மின்வெட்டால் மதுரை ராஜாஜி பொதுமருத்துவமனையும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுபவர்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மின்வெட்டுக் காரணமாக உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் இதுவரை 5 பேர் வரை மருத்துவமணையில் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மருத்துவமனை சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ‘உயிரிழப்பிற்கு மின்வெட்டை உடனடியாக சரி செய்யாததும் ஜெனரேட்டர் பழுதடைந்த நிலையில் இருந்ததும் செயறகை சுவாசக் கருவிகள் தரம் குறைவாக இருந்ததுமே காரணம். இதை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக மருத்துவமனை டீன் ’மருத்துவமனையில் மின் தடை மற்றும் உபகரணங்கள் குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்ல. மருத்துவமனையில் உள்ள அனைத்து உபகரணங்களும் நல்ல முறையில் உள்ளன. மருத்துவ உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது ’ எனத் தெரிவித்துள்ளார்.