தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் நீண்ட நாள் கழித்து கோடையில் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக நிலத்தின் வறட்சியைப் போக்கும் விதமாக பலத்த மழை இன்று பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, கொடைக்கானல், மதுரை ஆகிய பகுதிகளில் பலத்த காறுடன் கூடிய மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடையில் கடுமையான வெய்யில் மற்றும் வறட்சியால் வனவிலங்குகள் தீவனம் தேடுவதும் குடிநீர் தேடி வனச்சாலையில் நடமாடுவது விளைபொருட்கள் சேதப்படுத்துவது தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் நல்ல மழை பெய்ததை அடுத்து கோடையில் கொளுத்திய வெப்பம் குறைந்து குளிந்த சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் காற்றுடன் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாடிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.