1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (15:46 IST)

விமானத்திலிருந்து விழுந்த லேண்டிங் கியர்! – 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பு?

கொலம்பியாவில் விமானத்திலிருந்து லேண்டிங் கியர் விழுந்த விவகாரத்தால் விமானங்கள் ரத்தான நிலையில் 21 ஆயிரம் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொலம்பியாவில் உள்ள ஹோஸ் மரியா கர்டோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாத்தம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் லேண்டிங் கியர் கழன்று கீழே விழுந்துள்ளது.

இதனால் விமானம் மீண்டும் ஹோஸ் மரியா கர்டோவா விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் விமானத்தை பத்திரமாக லேண்டிங் கியர் இல்லாமலே தரையிறக்கியுள்ளனர். இதனால் ரியோநிக்ரோ வழியாக செல்லும் விமானங்கள் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து, காலதாமதம் ஆகியுள்ளது.

சுமார் 136 விமானங்கள் ரத்தான நிலையில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.