சசிகலா குடும்பத்துக்கு என்ன அருகதை இருக்கு: மதுசூதனன் ஆவேசம்!
சசிகலா குடும்பத்துக்கு என்ன அருகதை இருக்கு: மதுசூதனன் ஆவேசம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளாக போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கு சொந்தமான அந்த இல்லத்தில் அவர் இறந்த பின்னரும் வசித்து வந்தார் சசிகலா. அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தனர்.
இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஜெயலலிதா வாழ்ந்த அந்த வீட்டை அவரது நினைவிடமாக மாற்ற வேண்டும், சசிகலா குடும்பத்தை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர்.
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியின மதுசூதனன் இந்த விவகாரத்தை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஜெயலலிதாவின் போய்ஸ் கார்டன் இல்லத்தை அவரது தேவாலயமாக மாற்றுவோம் என்று அதிமுக தொண்டர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், அதிமுக தொண்டர்களே சிந்தியுங்கள். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வசிப்பதற்கு சசிகலா குடும்பத்தினருக்கு என்ன அருகதை இருக்கிறது?
தேர்தல் முடிந்ததும், அதிமுக தொண்டர்களைத் திரட்டி, இந்த குடும்பத்தை போயஸ் கார்டனில் இருந்து விரட்டுவதுதான் எங்களது முதல் வேலையாக இருக்கும். பின்னர் அதனை ஜெயலலிதாவின் தேவாலயமாக மாற்றுவோம் என்றார்.