செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (22:42 IST)

ஆர்.கே.நகர் தோல்விக்கு யார் காரணம்? மதுசூதனன் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான மதுசூதனன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது. ஒருசில கருத்துக்கணிப்புகளும் இதையே கூறின. ஆனால் அனைவரும் எதிர்பாராத வகையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்ததோடு டெபாசிட் தொகையையும் இழந்த திமுக, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையையும் எடுத்தது. ஆனால் ஆளும் அதிமுக, இதுவரை தோல்விக்கான காரணத்தை ஆராய ஒரு கூட்டத்தை கூட கூட்டவில்லை.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் வேட்பாளரான மதுசூதனன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆர்கே நகர் தோல்வி பற்றி இதுவரை ஆலோசிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள மதுசூதனன் இந்த தோல்விக்கு காரணமான அமைச்சர்களின் பட்டியலை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதுசூதனனின் இந்த கடிதத்தால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.