வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (14:40 IST)

அடித்தவரிடமும் அடிவாங்கியவரிடமும் கேளுங்கள் : சசிகலா புஷ்பா பற்றி பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை தாக்கியதும், அதிமுகவில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீதான பகிரங்க குற்றச்சாட்டுகளும்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 

 
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் தற்போது டெல்லி வரை பேசப்பட்டு வருகிறது.
 
மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டதுடன், அவர் ஒரு நேர்மையான மனிதர் என கூறினார். மேலும் திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முதல் ஆளாக திமுக எம்.பி.கனிமொழி ஆதரவு தெரிவித்தார். எனவே ஒரு பக்கம் அதிகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, திமுகவில் இணையலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. 
 
இது ஒருபுறம் இருக்க, இதுபற்றி திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 
பிறகட்சிகளில் இருந்து தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும்போது ஸ்டாலின் இதுபற்றி பேசினார். அவர் கூறும்போது “ இன்று நான்,  சென்னை விமான நிலையம் வந்தபோது, என்னை ஏராளமான செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்ட, சசிகலா புஷ்பாவை ஜெ. தாக்கிய விவகாரம் தொடர்பாக என்னிடம் கேள்வி கேட்டனர். அதுபற்றி அடித்தவர் மற்றும் அடி வாங்கியவரிடம் கேளுங்கள் என்று கூறினேன். ஏனெனில், ஜெ. தன்னை அறைந்ததாக சசிகலா, பொது இடத்தில் கூறவில்லை. பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். எனவே இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டேன்” என்று பேசியுள்ளார்.