சிறையில் சொகுசு வாழ்க்கை: 8 காவலர்கள் பணியிடை மாற்றம்
சமீபத்தில் புழல் சிறையில் உள்ள ஒருசில கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிவி, எப்.எம் ரேடியோ, செல்போன் அதில் வெளிநாட்டுக்கு பேசியது என ஸ்டார் ஓட்டல் போல் ஒருசில கைதிகள் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு சிறைக்காவலர்களும் உடந்தை என்பது தான் கொடுமையிலும் கொடுமை
எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்த அரசியல் தலைவர்கள் ஒருவர் கூட இந்த கைதிகளின் சொகுசு வாழ்க்கையை கண்டிக்கவில்லை. நெட்டிசன்களும் பொங்கவில்லை. நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ உடந்தையாக இருந்த புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தலைமை காவலர்களான விஜயராஜ், கணேசன்; சிறை வார்டன்களான பாவாடை ராயர், ஜபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கைதிகள் திருச்சி, கோவை, சேலம், பாளையங்ககோட்டை சிறைகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.