இந்தியாவை காதலிப்போம் என்ற வாசகத்துடன் போராடிய பெண்கள் கைது: சென்னையில் பரபரப்பு
இன்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் காதலர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காதலர்கள் கூட்டம் கூட்டமாக பல இடங்களில் தங்கள் காதலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் காதலர் தினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமான முறையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு சில பெண்கள் போராட்டம் நடத்தினார். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளில் அடக்குமுறைக்கு எதிரான இந்தியாவை காதலிப்போம் என்ற வாசகத்துடன் போராடி வந்தனர்
காதலர் தினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம் நடத்திய இந்த பெண்களை முதலில் எச்சரிக்கை செய்த போலீசார் அதன் பின்னரும் கலையாமல் தொடர்ந்து போராடியதை அடுத்து கைது செய்தனர். தற்போது 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது