சென்னையில் இன்று முதல் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் போராட்டம் நடத்த தடை
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (22:03 IST)
சென்னையில் இன்று முதல் போராட்டம் நடத்த தடை
சென்னை மாநகரில் கடந்த சில வருடங்களாக அடிக்கடி போராட்டம் நடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஆனால் எந்த போராட்டமும் அதன் நோக்கத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டம் செய்ததால் மாணவர்களின் படிப்பு பாழானது மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாக இருந்தது

இந்த நிலையில் இதனை கணக்கில்கொண்டு சென்னை மாநகரில் இன்று முதல் 15 நாட்களுக்கு போராட்டம் மற்றும் பேரணி நடத்த தடை என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தாலும் அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டம் செய்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :