செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (19:54 IST)

குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திடுக்கிடும் சம்பவம்

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகேயுள்ள வேகமங்கலத்தில் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகேயுள்ள வேகமங்கலத்தில் வசித்து வந்தவர் ஒரு பெண். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை பெயர் ஹேமா (7), மகன் விவேக் (4) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று தன் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாய் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனையடுத்து குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.