வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (09:11 IST)

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் இந்த நாட்களில் மதுக்கடைகள் செயல்படக்கூடாது! – தேர்தல் ஆணையம் உத்தரவு!

மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி மற்றும் தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பொதுவாக தேர்தல் தேதிகளில் மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த மக்களவை தேர்தலின்போதும், தேர்வு தேதியான ஏப்ரல் 19க்கு முன்னதாக ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் தேதியான 19ம் தேதி மாலை 6 மணி வரை அனைத்து மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4ம் தேதி அன்றும் முழுவதுமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவு வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K