திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:36 IST)

தமிழ்நாட்டில் செப்.15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; தமிழக அரசு.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து தற்போது செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த ஊரடங்கில் மேலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டு தலங்களில் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டபடி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைப்பிடித்து இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது