புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (15:53 IST)

உயிருடன் எரிந்தார்கள்: விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி பேட்டி!

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் எரிந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும்  கூறியுள்ளார்.
 
மேலும் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியபோது ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்தது என்றும் அப்போது அதிலிருந்து மனிதர்கள் சிலர் எரிந்து கொண்டே கீழே விழுந்தார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது